ஊரக்கரையில் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்.
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா எனும் கவிமணியின் வரிகளை முன்னிட்டு மார்ச் மாதம் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் தா பேட்டையை அடுத்த ஊரக்கரை கிராமத்தில் நாளந்தா வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் சார்பாக மகளிர் தின விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் , ஒன்றியத் தலைவர் சுப்பையன், வார்டு உறுப்பினர் ரவி மற்றும் மகளிர் நலன் துறை செயலாளர் பிரபாகரன் மற்றும் அநேக மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் நாளந்தா வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தனுஷ்மோகன், தேசிங்கு ராஜன், தரணிதரன், தினேஷ், பிராங்க்ளின் ஜெபசிங், கவுதம், ஹரிஹரசுதன், ஹரிபுத்திரி மற்றும் மதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றினர். இந்த நிகழ்வில் பெண்மை – ஒரு புரியாத புதிர் என்பது குறித்து நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர் செல்வன் பி.பிராங்க்ளின் ஜெபசிங் சிறப்புரையாற்றினார். இறுதியில் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து பெண்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.