ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் சத்தியகிரி (28). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிதா(19) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சத்தியகிரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் அவரை காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.