திருச்சி மாநகரில்நாளை குடிநீர் விநியோகம் ரத்து

0 4,906
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 22 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரைமட்ட கிணற்றில் இருந்து 55 நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சார்க்கார்பாளையம் அருகில் 900 எம்.எம். விட்டமுள்ள குழாயில் நீர் கசிவு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. அதனை சரிசெய்ய இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது எனவே மண்டலம்-2 விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, சுந்தராஜ நகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது, மண்டலம் -3 அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் புதியது-பழையது, மலையப்ப நகர் புதியது-பழையது, ரெயில் நகர் புதியது-பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது-பழையது, மேலகல்கண்டார் கோட்டை பிரிவு அலுவலகம், மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி, மேலகல்கண்டார் கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது-பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர், மண்டலம் -4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர், எல்.ஐ.சி .புதியது, எல்.ஐ.சி. சுப்பிரமணிய நகர், தென்றல் நகர் புதியது, தென்றல் நகர் பழையது, தென்றல் நகர் இ.பி காலனி, வி.என். நகர் புதியது, வி.என்.நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே.நகர், சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதிநகர், எடமலைப்பட்டி புதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, பழையது, அன்பு நகர் பழையது, புதியது, ரெங்கா நகர் ஆகிய உயர்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.