இந்தியன் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது

0 386
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனியில் இந்தியன் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையம் நவல்பட்டு அண்ணாநகரில் உள்ள இந்தியன் வங்கியோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 19ம் தேதி அதிகாலை மர்மநபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இத்தகவல் இந்தியன் வங்கி மேலாளர் பாலாஜிக்கு செல்போன் மூலம் அலாட்டாகி உள்ளது.

இது சம்பந்தமாக பாலாஜி நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் இதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஏடிஎம்-ஐ உடைத்துக் கொண்டிருந்த மர்ம நபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் விசாரணை செய்ததில் பூலாங்குடி காலனிகுறிஞ்சி தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் சச்சின் (21) என்பது தெரிய வந்தது. மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு துப்பாக்கி தொழிற்சாலை ரவுண்டானா பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இதுபோல் மர்மநபர் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அதில் சச்சினுக்கு தொடர்பு உண்டா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.