திருச்சி, மெக்கலன் கிரிக்கெட் அணி உட்பட 16 அணிகள் பங்குபெற்ற இரண்டாவது ஆண்டு பரமசிவம் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி ஜெ. ஜெ. பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மைதானங்களில் ஆகஸ்ட் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இறுதி போட்டியில் முதலில் விளையாடிய மேப் கிரிக்கெட் அகடெமி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய ஆக்ஸினா கிரிக்கெட் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேட்டிங்கில் மேப் கிரிக்கெட் அகடெமி அணியை சேர்ந்த ரூபகிருஷ்ணன் 54 ரன்களும், ஆக்ஸினா கிரிக்கெட் அணியை சேர்ந்த சக்தி 54 ரன்களும், விவேக் 32 ரன்களும், முகமது அனாஸ் அவுட் ஆகாமல் 35 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் ஆக்ஸினா அணியை சேர்ந்த இமானுவேல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், சேலத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற பொது மேலாளர் டி.அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ஆக்ஸினா கிரிக்கெட் மற்றும் இரண்டாவது இடம் பிடித்த மேப் கிரிக்கெட் அகடெமி அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை முறையே 50,000 மற்றும் 30,000 ஆகியவற்றை வழங்கினார்.