வாய்க்காலில் லாரி கவிழ்ந்து விபத்து

0 339
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் பிவிசி பைப்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர்த் தப்பினார்.

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா பொண்ணுகளத்துப்பட்டி தேவர்மலை பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான சந்திரசேகர். லாரி டிரைவரான இவர்
அசோக் லைலாண்ட் லாரியில் பிவிசி பைப்புகளை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பெங்களூர், சேலம் நாமக்கல் வழியாக தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தார்.. இந்நிலையில் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள உள்ள சிலையாத்தி பகுதியில் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி வலது புறமாக உள்ள அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் சந்திரசேகர் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.