ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழக்கத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டத்திருந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவையிலிருந்து வெளியேறிய அதிமுகவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா பெயரில் இயங்கி வந்த பல்கலைக்கழகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணா பல்கலைகழகத்துடன் இணைக்க முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் தலைமையில் மணப்பாறை ரவுண்டாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர், சின்னசாமி, பொன்னுசாமி, ராஜ் மோகன், நெட்ஸ் இளங்கோ, PVK.C.பழனிசாமி, பவுன் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.