எவ்வளவு காலம் தான் காவிரி பாலத்திற்கு பஞ்சர் ஒட்டுவது – வாகன ஓட்டிகள் வேதனை!
திருச்சி மாநகரின் மிக முக்கிய அடையாளமான காவிரி பாலம் பழுதடைந்து இருப்பதால் அவ்வபோது சாலை பணியாளர்கள் சின்ன சின்ன மேடு பள்ளங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஆனால் எத்தனை முறை காவிரி பாலத்தில் பஞ்சர் ஒட்டினாலும் அடுத்த சில நாட்களில் மேடு பள்ளம் நிறைந்த பகுதியாக காவிரி பாலம் மாறிவிடுகிறது.
காவிரியில் புதிய பாலம் கட்ட திட்டம் உள்ளது என்று தமிழக அரசும், திருச்சி மாவட்ட நிர்வாகமும் தெரிவித்திருந்தாலும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் காவிரி பாலத்தை முறைப்படி புனரமைப்பு செய்து சாலைகளை சீர் திருத்தினால், அடுத்த சில வருடங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது வாகன ஓட்டிகளின் கருத்தாக உள்ளது.

மேலும் 80 கோடி திட்ட மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் பாலத்தின் இடத்தை ஆராய்ந்து தற்காலிகமாக முறைப்படி சாலைகளை அமைத்தால் நாள்தோறும் காவிரி பாலத்தில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.