சாலை விபத்தில் இளைஞர் பலி

0 231
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூரில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோட்டார் பைக் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சி திருவானைக்காவல் அருகே மேலகொண்டையம்பேட்டையைச் சேர்ந்தவர் சப்பானி. இவரது மகன் 32 வயதான வினோத் குமார்.. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் மேலப்பலூரில் உள்ள தனது அண்ணன் மகனின் புண்ணிய தானத்திற்கு சென்று விட்டு நேற்று மாலை நான்கு முப்பது மணி அளவில் மேல கொண்டையம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்க்கு மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருவளநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தடுமாறி கீழே விழுந்தவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.