ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சித்திரை தேரோட்ட விழா
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – கோவிந்தா கோபாலா மந்திரம் முழங்க மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வலம் வந்த திருவரங்கன்.
காவிரி ஆறும் அதற்கு இயற்கையாகவே அழகு சேர்க்கும் சீரங்க மாநகரம் என்பது பழமொழி – எண்ணிலடங்கா சிறப்புகள் கொண்ட திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வைபவங்கள் நடைபெற்றாலும் கூட சித்திரை மாதத்தில் நடைபெறும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக பார்க்கப்படுகிறது.
வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் தேரோட்டமும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் கோரத வைபவமும் நடைபெறுகிறது – இதில் பட்டித் தொட்டிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொள்ளும் விழாவாக இந்த சித்திரை தேரோட்டம் மட்டுமே உள்ளது.
பல்வேறு சிறப்பு அம்சங்கள் அடங்கிய இந்த சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் நம்பர் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வளம் வந்தார் – கருட சேவை,அனுமந்த வாகனம்,பூந்தேர் அலங்காரம் போன்ற சிறப்பு அலங்காரத்தை காண்பதற்காக ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து இருந்தனர் – இதன் வரிசையில் நேற்று இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பர் திருத்தேருக்கு முன்பாக வையாளி வகையறா கண்டுருளினார்.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை ஆறு மணி அளவில் துவங்கியது – கோவிந்தா கோபாலா என்கிற விண்ணத்திர மந்திரம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருவரங்கனின் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விருதுநகர் சிவகங்கை இராமநாதபுரம் புதுக்கோட்டை போன்ற தென் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் வாழும் பொது மக்களின் குலதெய்வமாக திருச்சி ஸ்ரீரங்க அரங்கநாதர் இருப்பதால் நேற்று இரவே திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தற்காலிக கழிப்பிடம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் சுமார் 700க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.