திருநங்கைகளுக்காக உருவாக்கப்பட்ட தேசிய அளவிலான இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து கொள்ள அறிவுறுத்தல்

0 378
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சரால் கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்று ரேஷன் கார்டு பெறாத திருநங்கைகளுக்கு நிதியுதவி தொகை அறிவிக்கப்பட்டு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்று ரேஷன்கார்டு பெறாத திருநங்கைகளில் இதுநாள் வரை நிதியுதவி தொகை பெறாதவர்கள் வரும் 10ந் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி உதவி தொகையை பெற்று கொள்ள வேண்டும். மேலும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலம் திருநங்கைகளுக்கான தேசிய அளவிலான இணையதளமுகவரி http://transgender.dosje.gov.in/admin உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்றாம் பாலினர் கைபேசி செயலி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மற்றும் செயலியில் திருச்சி மாவட்டத்தில் வசித்து வரும் அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களும் தங்களது விபரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகிட வேண்டும். இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பதிவேற்றம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே இனி வரும் காலங்களில் அரசு மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் வழங்க இயலும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.