திருவெறும்பூர் அருகே உள்ள ஒன்றிய காலனியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் சதீஷ்குமார்(27). இவர் திருவெறும்பூர் பகுதியில் ஊர்காவல்படை காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பகவதிபுரம் பகுதியில் மொபட்டில் சென்றபோது எதிரே பைக்கில் வந்த பகவதி புரத்தைச் சேர்ந்த தமுமுக ஒன்றிய மாணவரணி செயலாளர் முகமதுஅப்பாஸ்(35) என்பவர் மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் சதீஷ்குமார் மற்றும் முகமது அப்பாஸ் வைத்துள்ள மீன் கடைக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறி உள்ளது. இச்சம்பவம் குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் முகமதுஅப்பாஸ் மீதும் முகமது அப்பாஸ் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ்குமார் மீதும் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.