தங்க நகை பட்டறையில் 1 கிலோ மதிப்பிலான நகைகள், ரொக்கப்பணம் கொள்ளை
திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியான சந்துக்கடை அருகே சவுந்திரபாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வீட்டில் (வீடும் – நகைப்பட்டறையும் சேர்ந்துள்ளது) 950 கிராம் தங்கம் கால்கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் பணம் திருட்டு – கோட்டை போலீசார் விசாரணை
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் குடியிருந்து வரும் ஜோசப் என்பவர் நகை பட்டறை வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்று தங்கியுள்ளார்.
இன்று காலை வந்து பார்க்கும் போது கடையில் இருந்த 950 கிராம் தங்கம், கால்கிலோ வெள்ளி, மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களைக் கொண்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் காவல்துணை ஆணையர் அன்பு காவல் உதவி ஆணையர் நிவேத லட்சுமி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாநகரில் நகை பட்டறையில் சுமார் ஒரு கிலோ மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்
படுத்தியுள்ளது.