திருப்பைஞ்சீலியில் கடையில் பழச்சாறு ஊரல் போட்ட 3 பேர் கைது.

0 695
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சலி யில் கண்ணன் என்பவரது கடையில் குடத்தில் 5 லிட்டர் பழச்சாறு ஊரல் போட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மது அருந்த திண்டாடி வருகின்றனர்.மதுவிற்கு அடிமையானவர்கள் பல்வேறு வழிமுறைகளை தேடி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போதையேற்றும் பானங் களை தயாரிக்க ஒருசில கும்பல் களமிறங்கின இந்நிலையில் ஈஸ்ட்டை வைத்து போதை பழச்சாறு தயாரித்து விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மணச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் காவலர்கள் திருப்பைஞ்ஞீலியில் கண்ணன் என்பவரது கடையில் சோதனை செய்தபோது ஒரு குடத்தில் 5 லிட்டர் பழச்சாறு ஊரல் போட்டு வைத்திருந்தது தெரிய வந்தது.விசாரணையில் திருப்பைஞ்சீலி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 54 வயதான பாலு, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான சுரேஷ்,தெற்கு தெருவைச் சேர்ந்த 36 வயதான கண்ணன் என தெரியவந்தது. அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி ஜேஎம் 3 குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குளித்தலை சிறையில் அடைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.