சரடமங்கலத்தில் சாராய ஊறல் போட்ட இளைஞர் கைது.

0 874
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சரடமங்கலத்தில் சாராய ஊறல் போட்ட இளைஞரை கைது செய்து 120 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். கொரோன வைரஸ் தொற்று பரவலையடுத்து தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து வணிக நிறுவனங்கள் உட்பட அரசு மதுபான கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் மது குடிக்க திண்டாடி வருகின்றனர்.மதுபோதைக்கு அடிமையானோர் மாற்று்வழிகளைத் தேடி்வருகின்றனர்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆங்காங்கே சாராயம் காய்ச்சும் தொழிலை தொடங்கி வருகின்றனர். இந்நிலையில் சரடமங்கலம் பகுதியில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருப்பதாக சிறுகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரடமங்கலம் காலனி பகுதியில் உள்ள ஓடையில் சாராய ஊழல் ஊழல் போட்டிருப்பது தெரியவந்தது.போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதி காலனி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் 21வயதான பிரபு என்பவர் சாராய ஊறல் போட்டது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை செய்த போலீசார் ஊறல் போட்டிருந்த 120 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய து லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.