சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்

0 228
Stalin trichy visit

 

திருச்சி, ஜுன் 17  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது.

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் மற்றும் க்யூப் ரூட்ஸ் பவுண்டேசன் நிறுவனம் இணைந்து டாக்டர்ஸ் இரத்த வங்கியுடன் கைகோர்த்து நடத்திய இரத்ததான முகாம் கல்லக்குடி சுங்கச்சாவடி வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியானது
SIPL-திட்டத்தலைவர் பெரியதுரை தலைமையிலும் SIPL-மேலாளர் ரமேஷ் மற்றும் க்யூப் ரூட்ஸ் பவுண்டேசன் அதிகாரி நித்தியகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக இலால்குடி கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் மற்றும்,
இலால்குடி வட்டாட்சியர் விக்னேஷ்,துணை வட்டாட்சியர்,கீழரசூர் கிராம நிர்வாக அலுவலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக அனைவரும் இரத்ததான விழிப்புணர்வு பற்றிய உறுதிமொழி ஏற்று இரத்தானத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு இரத்தானம் செய்தவர்களுக்கு இலால்குடி கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் தங்கம்  சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.