சட்ட விழிப்புணர்வு முகாம்

0 217
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 17 திருச்சி மாவட்டம் ஆலக்குடி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியான ஜெசிந்தா மார்ட்டின் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயாலாளர் இந்திராகாந்தி ஆகியோர் கலந்து கொண்டு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சாந்தி சாமி ஊராட்சி மன்ற தலைவர், ஆலக்குடி . மீனாபிரியா ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோவிந்தராசு, சமூக ஆர்வலர்கள் அன்பழகன், சுந்தரராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர் மற்றும் ஆலக்குடி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.