ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆலம்பாக்கம் கிராமத்தில் புதிய சாலை அமைத்து தரும்படி ஒன்றிய கவுன்சிலர் ஜெனிபர் ஹென்றி பிரபாவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்ற கவுன்சிலர் ஜெனிபர் ஜெனி பிரபா ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் துணைத் தலைவர் வின்சன் வார்டு உறுப்பினர்கள் வில்லியம், அல்போன்ஸ்ராஜ், சேவியர், காமராஜ், முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம், ராமதாஸ், ராசு, ஜான்சன், பெரியசாமி, பிரகாஷ், சோமு மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.