லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கருவூல கணக்காளருக்கு 3 ஆண்டு சிறை
திருச்சி, ஜூலை 13 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கருவூல கணக்காளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மண்ணச்சநல்லுர் வட்டம், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் சோ.நல்லையன் இவர் தனது பணிமுதிர்வின்போது, அவரது கணக்கில் இருக்கும் விடுப்பை பணமாக்க ரூ.500/- கையூட்டு கேட்டு பெற்ற வழக்கில் திரு.கிருஷ்ணமூர்த்தி, வயது 62/2023, த/பெ.நம்பியப்பன், முன்னர் கணக்கர், சார்நிலை கருவூலம், லால்குடி, திருச்சி மாவட்டம் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.
மண்ணச்சநல்லுர் வட்டம், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் சோ.நல்லையன் இவர் தனது பணிமுதிர்வின்போது, அவரது கணக்கில் இருக்கும் விடுப்பை பணமாக்க கோரி திருச்சி மாவட்டம், லால்குடி, சார்நிலை கருவூலத்தில் கணக்கராக பணியாற்றியகிருஷ்ணமூர்த்தியை அணுகியுள்ளார் இதற்கு கிருஷ்ணமூர்த்தி ரூ. 500 லஞ்சம் கேட்டதால், லஞ்சம் கொடுக்க விரும்பாத நல்லையன் மீது திருச்சி ஊ.த.க பிரிவு கு.எண்.8/2008 சட்ட பிரிவு 7 1988-ன்படி கடந்த 15.03.2008ம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 17.03.2008 ஆம் தேதி மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் சோ.நல்லையன் என்பவரிடம் லஞ்சப் பணம் ரூ.500/-அய் கேட்டு பெற்ற போது கிருஷ்ணமூர்த்தியை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று இன்று 13.07.2023 திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் சமயபுரம், சார்நிலை கருவூலம் முன்னாள் கணக்காளர் கிருஷ்ணமூர்த்தி(62)க்கு லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும்,ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேற்படி வழக்கினை காவல் ஆய்வாளர்சக்திவேல், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அவர்கள் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக சுரேஷ்குமார் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.