சாலை விபத்தில்  சிறுமி உயிரிழப்பு-தந்தை படுகாயம்

0 318
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சிறுமி லாரி் மீது உரசியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த தந்தை படுகாயமடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் சூரமங்கலம் செல்லத்தம்பட்டியைச் சேர்ந்தவர் 40 வயதான கிருஷ்ணராஜ். இவர் திருச்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இவருடைய மகள் 14 வயதான  இந்துஜா வாணி. நேற்று மாலை 6.30 மணியளவில் சொந்த ஊருக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சிறுமியும், கிருஷ்ணராஜூம்  சென்று கொண்டிருந்தனர்.வாகனத்தை சிறுமி இந்துஜா வாணி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள குணசீலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார். இதில் லாரியின் பக்கவாட்டில் எதிர்பாராத விதமாக மோதியதில் தடுமாறி கீழே விழுந்தனர்.

சிறுமிக்கு தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னால் அமர்ந்திருந்த தந்தை படுகாயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த கிருஷ்ணராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி் வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.