மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை..

0 423
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

மணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் 43 வயதான பாலச்சந்திரன். இவர் சிங்கப்பூரில் 3 வருடமாக வேலை செய்துவிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்து தனது மனைவி மகாலட்சுமி மற்றும் இரண்டு குழந்தையுடன் வசித்து வந்தார். சொந்த ஊருக்கு வந்த பிறகு மூன்று மாதங்களாக சம்சா வியாபாரம் செய்து வந்தார். இதற்க்காக தினமும் அதிகாலை 4 மணிக்கு சம்சா தயார் செய்து வியாபாரத்திற்கு சென்று வந்துள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் 16 ம் தேதி கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மனைவி மகாலட்சுமி கணவரை பழையபடி நீங்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு வெங்காயம் வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.பின்னர் அவர் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணையானது திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து மகிளா நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மனைவியை கொலை செய்த கணவர் பாலச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 அயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து பாலச்சந்திரனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.