அரசு பள்ளி பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் பணம் கொள்ளை

0 336
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆடிட்டோரியம் கட்டுவதற்காக பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து நன்கொடையாக ரூ.3 லட்சம் வரை பணம் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. அந்தப் பணத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள ஒரு பிரோவில் வைத்து பூட்டி விட்டு தலைமை ஆசிரியை நேற்று மாலை பள்ளியை பூட்டிவிட்டு சென்று விட்டார். பின்னர் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த போது பள்ளியின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன் அலுவலகம் மற்றும் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பிரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து விசாரணை நடத்தியதுடன் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.