பைக் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த விவசாயி மீது எதிரே வந்த மோட்டார் பைக் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
புள்ளம்பாடி அருகே உள்ள மால்வாய் மேலத் தெருவைச் சேர்ந்தவர் 58 வயதானஅண்ணாமலை. விவசாயியான இவர் மால்வாயில் இருந்து கல்லக்குடி சாலையில் தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அதேபோல், சரடமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் 19 வயதான நவீன்குமார் எதிரே மோட்டார் பைக்கில் வந்த கொண்டிருந்தார்.அப்போது மேலரசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது விவசாயி ஓட்டி வந்த மோட்டார் பைக் மீது எதிரே வந்த மோட்டார் பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலையை அப்பகுதியினர் மீட்டு கல்லக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் பலியான அண்ணாமலை,லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.