பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வுப் பயணம்
திருப்பூர், ஆக.1 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளோடு தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவிகளையும், ஆசிரியர்களையும், அலுவலக பணியாளர்களையும், நூலகர்களையும், கல்வி அலுவலர்களையும் சந்தித்து உரையாட வேண்டும் என்னும் இலட்சியத்துடன் 234 77 ஆய்வுப் பயணத்தை அமைச்சர் உதயநிதியின் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியிலிருந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி இதுவரை 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்ற ஆய்வு செய்துள்ளார்.

61வது தொகுதியாக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாட்சி ஜெயராமன் தொகுதியிலுள்ள அமைந்துள்ள காளியண்ணபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விரிவான ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள் முன்வைத்த மேம்பாடு சார்ந்த கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.