மாநகராட்சி வேண்டாம் – திருச்சி குண்டூர் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

0 497
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சியினை 100 வார்டுகளாக உயர்த்துவதற்காக முதற்கட்டமாக பஞ்சாயத்தில் உள்ள பல பகுதிகள் மாநகராட்சியுடன் இணைய உள்ளது. இதற்காக முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாகவே திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பஞ்சாயத்து பகுதியை சார்ந்த பல பகுதி மக்கள் வந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையக்குறிச்சி, குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி, கீழக்குறிச்சி ஆகியவை மாநகராட்சியுடன் இணைய உள்ள நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மாநகராட்சி வேண்டாமென்றும், தங்கள் பஞ்சாயத்தாகவே இருக்க வேண்டும் என்றும், இதனால் 100 நாள் வேலை உள்ளிட்ட வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய  https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.