திருச்சி சாரநாதன் கல்லூரிக்கு நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 3 விருதுகள்!

0 500
Stalin trichy visit

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

மகாத்மா காந்தி அவர்களின் சீரிய நோக்கங்களில் ஒன்றான மாணவர் இயக்கங்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அண்ணா பல்கலைக்கழகம் 2019 – 2020ம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளை அறிவித்து சிறப்பு செய்துள்ளது.

இந்த விருதிற்காக தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வல்லுநர் குழுவின் பரிசீலனை மற்றும் பரிந்துரையின்படி திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைந்துள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பிற்கு சீர்மிகு சேவையை பாராட்டி 3 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

அக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் K.கார்த்திகேயன் திறம்பட நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பினை நடத்தியதற்காக 2019 – 2020ம் ஆண்டிற்கான “பல்கலைக்கழக அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருதினை” வென்றார்.

தொடர்ந்து அக்கல்லூரியின் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களாக மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறையில் பயிலும் யு. சிபி பிரகதீஸ் மற்றும் மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிலும் R.H ஜனனி ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் சாரநாதன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் K.கார்த்திகேயன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் யு.சிபி பிரகதீஸ் மற்றும் R.H ஜனனி ஆகியோருக்கு கல்லூரியின் முதல்வர் D.வளவன், செயலாளர் S.ரவீந்திரன், பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.