விஷம் குடித்து இளைஞர் தற்கொலை
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள திருப்பால்துறையில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் அடுத்த திருப்பால்துறை சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் 35 வயதான கணபதி.இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.இவர் கடந்த 20 ந்தேதி மாலை வீட்டில் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவானைக்காவல் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஷம் குடித்து உள்ளதாக தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.