அரசுப் பள்ளியில் பணத்தை திருடியவர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வளர்ச்சி குறித்த பல்வேறு பணிகளுக்காக பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து நன்கொடையாக 1.90 லட்சம் பணம் வாங்கி வைத்திருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 19 ம்தேதி இரவு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம், மருவூரை சேர்ந்த மகேந்திரன் (67) என்ற முதியவரை கைது செய்து அவரிடம் இருந்து 75 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.