மாணவர்களுடன் உணவருந்திய மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்

0 200
Stalin trichy visit

திருச்சி, ஆக.25  தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ள நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தியதுடம் மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். முதல்நாள் உணவாக கேசரி, சேமியா கிச்சடியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ், திமுக நகர செயலாளர் மு.ம.செல்வம், நகர்மன்ற துணைத்தலைவர் முத்துலெட்சுமி கோபி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜான்பிரிட்டோ, செல்வா, மனோன்மணி,
திமுக நிர்வாகிகள், நகராட்சி ஆணையர், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.