தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
திருச்சி மாவட்டம், வையம்பட்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் அவர்களின் 71 வயது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து கழக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கே.குமார் தலைமையில் சென்னல் மாரியம்மன் கோவிலில் கேப்டன் விஜயகாந்த் பெயரில் சிறப்பு பிரார்த்தனை செய்து கேப்டன் பூரணமாக குணமடைந்து மீண்டும் பழைய உத்வேகத்துடன் கழக பணியாற்ற வேண்டும் அம்மனிடம் வேண்டுதல் வைத்தனர். பின்னர் வையம்பட்டி கடைவீதியில் 30 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர். பாரதிதாசன் ஏற்றிவைத்து சிறப்புறையாற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு, பேனாக்கள் வழங்கப்பட்டது. இதேபோல் செக்கனம் பகுதியில் கழக கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் பெண்களுக்கு சேலைகள் வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து வையம்பட்டி தெற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அர்ஜுனன், மாவட்ட பொருளாளர் வசந்த் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜான்பீட்டர், செயற்குழு உறப்பினர் முல்லை.சந்திரசேகர், ஒன்றிய அவைத்தலைவர் ஸ்வீட் பாலு, ஒன்றிய பொருளாளர் முத்தமிழ்செல்வன், ஒன்றிய துணைச்செயலாளர்களும், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்களுமான புதுக்கோட்டை மணிராஜ், வையம்பட்டி அன்பு, ஒன்றிய துணைச் செயலாளர் சாதிக்பாட்ஷா, மாவட்ட பிரதிநிதிகள் வேல்முருகன், முருகேஷ், வையம்பட்டி ஊராட்சி செயலாளர் முருகானந்து, வைரம்பட்டி கிளைச் செயலாளர் கருப்பசாமி, கண்ணன், சக்தி, பொன்னன், ரெட் ராஜா, தேக்கமலை, செக்கனம் ஊராட்சி செயலாளர் தோமாஸ், நாகராஜ், சக்திவேல், தங்கமுத்து, மோகன் உள்ளிட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றிய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.