தீபாவளி பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி – மாவட்ட ஆட்சியர்!
வருகின்ற நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் புதிய தற்காலிக பட்டாசு சில்லரை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள உரிமை கோரி விண்ணப்பங்கள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008 உட்பட்டு உரிய ஆவணங்களுடன் இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும்,

30ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.