தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

0 396
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறையினர் சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மக்கள் மழைகாலத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவசர காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நிலைய அலுவலர் சக்திவேல் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் இருக்கும் பெட்ஷீட்டை வைத்தே ஸ்டெச்சர் போன்று ஏற்படுத்தி எப்படி தூக்கி செல்ல வேண்டும்.

விஷ ஜந்துக்களிடம் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது. குடியிருப்புகள் வரும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை துன்புறுத்தாமல் பிடித்து தீயணைப்பு துறை உதவியுடன் வனப்பகுதியில் விடுவது எப்படி? வீட்டில் உள்ள தெர்மாகோல், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட வீணான பொருட்களின் மூலம் தண்ணீரில் மூழ்காமல் தப்பித் கொள்வது எப்படி என்பது தொடர்பாக செய்முறை விளக்கத்துடன் ஒத்திகை செய்து காட்டினர். தீயணைப்புதுறை சார்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்ன என்பது குறித்து விளக்கினர். இந்த நிகழ்வில் வருவாய்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.