துவாக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

0 304
Stalin trichy visit

துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இந்த மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறப்படும் பகுதிகளான நேருநகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல்நகர், இந்திராநகர், பெல் டவுன்ஷிப் சி, ஏ, இ, ஆர். மற்றும் பி.எச். செக்டார், தேசிய தொழில்நுட்ப கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மாநகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மன்னார்புரம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.