ஒருங்கிணைந்த ஆன்மீகச் சுற்றுப் பயணம்
தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு 2022-23 அறிவிப்பு எண் 29 இன் படி பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களுக்கு சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்த ஆன்மீகச் சுற்றுப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது
அதன்படி புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை நேற்று (23.09.2023 )சுமார் 18 பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆன்மீக சுற்றுப் பயணம் வந்தனர் அவர்கள் பெருமாளை சேவித்த பிறகு திருக்கோயில் சார்பாக அனைவருக்கும் பிரசாத பைகள் வழங்கப்பட்டது .