பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்திய டால்மியா சிமெண்ட் நிறுவன அதிகாரிகள்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே புதூர் பாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.
புதூர் பாளையம் கிராமத்தில் அரசு . மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லக்குடியில் இயங்கி வரும் டால்மியா சிமெண்ட் ஆலையின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.
இந்நிகழ்வில் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் அதிகாரிகள்,பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.