பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சி, அக்.7 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பனமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் பைக்கிலிருந்து தானாக தடுமாறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் அய்க்கால், காவனூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் 32 வயதான மணிகண்டன்..இவர் கடந்த 5 ம் தேதி மாலை 5 மணியளவில் அரியலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக தனது பஜாஜ் பல்சர் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது பண மங்கலம் த்தில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச் சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக தானாக தடுமாறி கீழே விழுந்த விபத்தில் படுகாயமடைந்த்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.