ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு

0 259
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி ரயில் நிலையத்தில் குருவாயூர் சென்னை விரைவு ரயில் முன்பு தவறி விழுந்த தம்பி உயிரிழந்தார். தடுக்க முயன்ற அண்ணன் படுகாயமடைந்தார்.

திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாரானூர் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கந்தவேல். இவரது மகன்கள்  கார்த்திக் (26) மற்றும்  ஆனந்த்(24).அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவரும் லால்குடியில் உள்ள உறவினரை பார்ப்பதற்க்காக வந் துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இருவரும் லால்குடி ரயில் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது தம்பி ஆனந்த்  குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் முன்பு திடிரென தவறி விழுந்தார்.இதைக் கண்ட அவரது அண்ணன் கார்த்திக் அவரை தடுத்துள்ளார்.
இந்த விபத்தில் தம்பி ஆனந்த படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்கச் சென்ற அண்ணன் கார்த்திக் ரயிலில் அடிப்பட்டு படுகாயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திக்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த ஆனந்த் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த அண்ணன் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விரைவு ரயில் முன்பு ஆனந்த் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.