சமயபுரத்தில் வாக்குசாவடி ஆய்வு குழு கூட்டம்…

0 373
Stalin trichy visit

சமயபுரத்தில் அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழுக்களின் வாக்குசாவடி ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழுக்களின் வாக்குசாவடி ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.

கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க..

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழகங்களில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர்,இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழுக்களின் வாக்குசாவடி குழு – ஆய்வு செய்யும் கூட்டம் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்சோதி தலைமையில் இன்று
நடைப்பெற்றது.
இதில் பூத் கமிட்டி பணிகளுக்கான மாவட்ட பொறுப்பாளர் மாநில அண்ணா தொழிற்சங்கம் பேரவை தலைவர் தாடி.மா. இராசு பங்கேற்று கையேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தகவல் தொழில்நுட்ப அணியின் கிழக்கு ஒன்றிய செயலாளர்ரும், வழக்கறிஞருமான கணேஷ் என்கின்ற விக்னேஸ்வரன் முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், சம்பந்தபட்ட வாக்குச்சாவடிகளை சார்ந்த பூத் கமிட்டியினர் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.