திருவெறும்பூரில் நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக பூத் கமிட்டி கூட்டம்
திருச்சி, நவ. 18 திருச்சி திருவெறும்பூர் வடக்கு-, தெற்கு ஒன்றியம் துவாக்குடி நகரம் மற்றும் கூத்தப்பார் பேரூர் கழகத்தை சேர்ந்த பாக முகவர்கள் மற்றும் பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் திருவெறும்பூர் தொ.மு.ச. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக தெற்கு மாவட்டக் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பேசுகையில், நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிற முகாம்களில் முழுமையாக கலந்து கொண்டு புதிய வாக்காளர்களை சேர்ப்பதும் இறந்த மற்றும் மாற்றமான வாக்காளர்களை பெயர் நீக்கம் செய்வதும் போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார். மேலும் மாவட்ட கழகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் இப்பணியினை கண்காணிக்க கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே.எஸ்.எம். கருணாநிதி, கங்காதரன் நகரக்கழகச் செயலாளர் காயம்பு, பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு மற்றும் பாக முகவர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.