மணப்பாறையில் நடைபெற்ற திமுக பூத் கமிட்டி கூட்டம்
திருச்சி, நவ. 18 திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மணப்பாறை மருங்காபுரி வடக்கு தெற்கு மத்திய ஒன்றியம் மற்றும் பொன்னம்பட்டி பேரூர் கழகத்தை சேர்ந்த பாக முகவர்கள், பூத் கமிட்டி கூட்டம் துவரங்குறிச்சி தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நவ. 24, 25 தேதிகளில் நடைபெறுகின்ற வாக்காளர் சேர்ப்பு முகாமில் விழிப்புடன் கலந்து கொண்டு புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் எனவும், நாடாளுமன்ற தேர்தலில் நம் நாட்டை காக்கின்ற தேர்தலுக்கான ஆயத்த கூட்டமாக இருக்க வேண்டுமென்று அமைச்சர் அன்பில்மகேஸ் கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ் சபியுல்லா குணசேகரன், மாமன்ற உறுப்பினர் லீலாவேலு, ஒன்றிய கழகச் செயலாளர்கள் செல்வராஜ், சின்னடைக்கண், பழனியாண்டி, பேரூர் கழகச் செயலாளர் நாகராஜ் மற்றும் பாக முகவர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.