திருச்சியில் பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை
திருச்சியில் பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை
திருச்சி, நவ. 21 சென்னையில் மோகன் லால் என்ற நகை வியாபாரிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய கடைகளில் அமலாக்கத்துறை யினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி பெரிய கடை வீதி மற்றும் அருகே உள்ள இடங்களில் நேற்று மாலை முதல் அமலாக்கத்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஜாபர்ஷா தெருவில் உள்ள ரூபி ஜுவல்லரி, சூர்யா, விக்னேஷ் ஜூவல்லரி உள்ளிட்ட மூன்று நகை கடைகள் மற்றும் பெரியகடை வீதியில் உள்ள சக்ரா ஜெயின் ஜுவல்லரிஸ் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
இந்த சோதனையில் பத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்களுடன் நான்கிற்கும் மேற்பட்ட கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்