ஒற்றைக்காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்
திருச்சி, டிச. 4 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எதுமலையில் உள்ள சோழ கண்ணியம்மன் கோயில் பகுதியில் உணவிட்ட உறவுக்கு படையல் முன் ஒற்றைக்காலில் நின்று அஞ்சலி செலுத்தி வியப்பில் ஆழ்த்திய சேவல்.சமூக வலைதளங்களில் வைரலாகும் சேவலின் வீடியோ.
மண்ணச்சநல்லூர் அருகே எதுமலையில் உள்ள சோழ கன்னியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி். இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார் இவருடைய மனைவி 73 வயதான கமலம். இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் மகன்களும்,ஒரு பெண் மகளும் உள்ளனர்.அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே நகரப் பகுதியில் வசித்து வருகின்றனர். கணவரை இழந்த கமலம் எதுமலையில் உள்ள சோழக்கண்ணியம்மன் கோவில் பகுதியில் தனது தோட்டத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.மேலும் தனது தோட்டத்தில் வெள்ளாடுகள்,நாட்டுக்கோழிகள் உள்ளிட்டவைகளை அன்போடு வளர்த்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவால் கமலம் இயற்கை எய்தினார். கமலத்திற்கு முதல் காரிய சடங்குகள் செய்வதற்காக
அவரது உறவினர்கள் அவரது வீட்டில் படையல் போட்டுள்ளனர்.அப்போது காரிய சடங்கிற்க்காக படையல் போட்ட இடத்திற்கு முன் வந்து நின்ற சேவல் அன்போடு உணவளித்து வளர்த்து வந்த தனது எஜமானி கமலம் இல்லாததை கண்ட சேவல் தனது எஜமானிக்கு மரியாதை செலுத்தும் விதமாக சுமார் 2 நிமிடம் வரை படையல் முன்பு ஒற்றைக்காலில் நின்று அஞ்சலி செலுத்திவிட்டு அமைதியாக நின்று விட்டது. பின்னர் சேவல் தன் உயிரை விட்டது.
சேவல் ஒற்றைக்காலில் நின்று அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதியை மக்களிடையே பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. மறைந்த எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவலின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.