சத்து மாத்திரைகளை உட்கொண்ட மாணவர் உயிரிழப்பு

0 453
Stalin trichy visit

திருச்சி, டிச. 4  திருச்சி புத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவன் வில்பிரிட் பவுல் சிங், கடந்த 1 ஆம் தேதி பள்ளியில் அரசு சார்பில் வழங்கிய சத்துமாத்திரைகளை தினசரி ஒன்றாக 30நாட்கள் சாப்பிட வேண்டும் என கூறிய நிலையிலிருந்த அன்றைய தினமே 10 மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்று இரவே உடல்நல குறைவு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார். தகவல் தெரிந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர். இதுகுறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.