மணி மண்டபங்களை திறக்க கோரி பா.ஜ.க. மனு
திருச்சி, டிச. 4 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அதில்
திருச்சி OFT -ல் 18 வருடமாக பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் பணி வழங்க மறுக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து பேசி பணி வழங்க கூறியுள்ள நிலையில் தனியார் நிறுவனம் உடனடியாக தூய்மை பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் எனவும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ள பெரும்பிடுகு முத்தரையர், பன்னிர்செல்வம், தியாகராஜ பாகவதர் மணி மண்டபங்கள் தற்பொழுது வரை திறக்கபடாமல் உள்ளது. அதனை உடனடியாக திறக்க வேண்டும் என கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனு அளித்தனர்.