மயங்கி விழுந்த சிறை வார்டன் சாவு

0 446
Stalin trichy visit

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(40). இவர் திருச்சி மத்திய சிறையில் சிறை வார்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இவர் மதுரையில் கபடி போட்டியில் பங்கேற்பதற்காக சென்று இருந்தார். அங்கு சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் சரவணன் கபடி பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாரதவிதமாக திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற சிறை காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சரவணனுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.