வீர முத்தரையர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வீர முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 475
Stalin trichy visit

திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் காந்தி மார்கெட் வரை
உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று சட்டபேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட பாலம் அமைத்தால் கண்டோன்மெண்ட் அருகே உள்ள வீர முத்தரையர் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்கக்கூடாது என வலியுறுத்தி திருச்சி கண்டோன்மெண்ட் அருகே வீர முத்தரையர் சங்கம் சார்பில் கண்டோன்மெண்ட் முத்தரையர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது அடையாளத்தை அழிக்க கூடாது என வலியுறுத்தியும், தமிழக அரசு இதனை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.