நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

0 407
Stalin trichy visit

துறையூரில் உள்ள சொரத்தூர் செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கு தற்போது நவீன இயந்திரங்களைக் கொண்டு குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நகராட்சி குப்பை கிடங்கில் பிரிக்கப்படாத குப்பையில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. உடனடியாக பொதுமக்கள் இதுகுறித்து துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த நிலைய அதிகாரிகள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.