லாரி மோதி முதியவர் பலி

0 342
Stalin trichy visit

திருச்சி, பிப். 21 திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் முதியவர்  உயிரிழந்தார்.

காட்டுப்புத்தூர் அருகேயுள்ள பெரியநாச்சிபட்டி சேர்ந்த ராமசாமி மகன் அய்யாவு (90), இவர் காட்டுப்புத்தூர் மோகனூர் பிரிவு சாலை அருகே நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த காட்டுப்புத்தூர் போலீஸார் சம்பவயிடம் சென்று உயிரிழந்த அய்யாவு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாரி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.