ஓட்டலில் திடீர் தீ; உடனே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

0 367
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அசைவ உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் உணவு சமைக்கும் போதே புகை செல்லும் சிமினியில் இருந்து திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

இதனால் புகை பரவியது இதையடுத்து ஊழியர்கள் துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த நிலைய அதிகாரி அறிவழகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.