திருச்சியில் நிறுவ உள்ள தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலை!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக் கரையில் 37 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் ஆஞ்சநேயர் சிலையை நிறுவ உள்ளார்.

தமிழகத்தில் சென்னை நங்கநல்லூரில் உள்ள 33 அடி உயரத்திலும், நாமக்கல்லில் 18 அடி உயரத்திலும் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. தற்போது அதை விட உயரமாக 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக் கரையில் ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக அங்கு கோவில் மற்றும் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நிறுவப்படும் அதன் மூலம் தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலை என்ற பெருமையை பெற உள்ளது.
தற்போது ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்து சிலை திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, ஆஞ்சநேயர் சிலை இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி மூலம் கொள்ளிடக்கரைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் நல்ல நாள் பார்த்து கீழே இறக்கப்பட்டு சிலை டிசம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்பட உள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது